மத்திய அரசு நிறுவனமான NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்
- ஜெனரல் மேனேஜர் (பொறியியல்) – 1
- ஜெனரல் மேனேஜர் (ஒழுங்குமுறை) – 1
- ஜெனரல் மேனேஜர் (கமர்சியல்) – 1
- கூடுதல் ஜெனரல் மேனேஜர் (சிவில்) – 1
- கூடுதல் ஜெனரல் மேனேஜர் (மெக்கானிக்கல்) – 1
- கூடுதல் ஜெனரல் மேனேஜர் (எலெக்ட்ரிக்கல்/ C&I) -1
- சீனியர் மேனேஜர் (சிவில்) – 4
- சீனியர் மேனேஜர் (மெக்கானிக்கல்) – 4
- சீனியர் மேனேஜர் ( எலெக்ட்ரிக்கல்) – 2
- மேனேஜர் (சிவில்) – 3
- மேனேஜர் (மெக்கானிக்கல்) – 3
- மேனேஜர் (C&I) – 2
- மொத்தம் – 25
வயது வரம்பு: ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 55 வயது வரை இருக்கலாம்.
கூடுதல் ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.
சீனியர் மேனேஜர் பதவிக்கு அதிகபடியாக 40 வயது வரையும், மேனேஜர் பதவிக்கு 35 வயது வரையும் இருக்கலாம்.
கல்வித்தகுதி:
* ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு அந்தந்த துறை சார்ந்த பொறியியல் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் 20 வருடம் அனுபவம் தெரிந்திருக்க வேண்டும்.
* கூடுதல் ஜென்ரல் மேனேஜர் பதவிக்கு துறை ரீதியான பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் 15 ஆண்டு அனுபவம் தேவை.
* சீனியர் மேனேஜர் பதவிக்கு துறை சாரந்த பொறியியல் டிகிரியுடன் குறைந்தபட்சம் 13 வருடம் அனுபவம் தேவை.
* மேனேஜர் பதவிக்கு பொறியல் பட்டப்படிப்புடன் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பள விவரம்:
* ஜென்ரல் மேனேஜர் மற்றும் கூடுதல் ஜென்ரல் மேனேஜர் பதவிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் அதிகபடியாக ரூ.2.60 லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
* சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.2.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
* மேனேஜர் பதவிக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேசிய அனல் மின் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் இருந்து, கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://careers.ntpc.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக அனைத்து தேவையான ஆவணங்களையும் சமர்பித்து, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் செலுத்த விலக்கு அளிக்கப்படுகிறது.