fbpx

SBI வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை…! வெளியான அறிவிப்பு…!

பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நபர் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 29 ஏ இன் கீழ் (1951 இன் 43) பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை அல்லது மாநில சட்டமன்றத்திற்கான கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதி பெற்றவையாகும். தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலமே தகுதிவாய்ந்த அரசியல் கட்சியால் பணமாக்கப்படும்.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) XXVIII மூன்றாம் கட்ட விற்பனையில், 04.10.2023 முதல் 13.10.2023 வரை அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் தேர்தல் பத்திரங்களை வெளியிடவும் பணமாக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்கு இது செல்லுபடியாகும். இந்தக் கால அவகாசம் முடிந்த பின்னர் தேர்தல் பத்திரம் டெபாசிட் செய்யப்பட்டால் எந்த அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப்படாது. தகுதிவாய்ந்த ஓர் அரசியல் கட்சி தனது கணக்கில் டெபாசிட் செய்த தேர்தல் பத்திரம் அன்றே வரவு வைக்கப்படும்.

Vignesh

Next Post

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.40,000 வரை ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…!

Sat Sep 30 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer I, Project Engineer I பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு […]

You May Like