தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நீதித்துறை தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய […]

தாராபுரம் தொகுதி யாருடைய அரசியல் செல்வாக்கில் உள்ளது என்ற விவாதம் இடைத்தேர்தல் களத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி ஒவ்வொரு கட்சியும் தங்களது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தி வரும் நிலையில், த.வெ.க. தரப்பும் தொகுதியில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. தாராபுரம் தொகுதியின் சமீபத்திய தேர்தல் வரலாற்றைப் பார்க்கும்போது, ஒரே கட்சி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியாக அது அமையவில்லை. 2001-ல் பாமக, 2006-ல் திமுக, 2011-ல் […]

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த வேட்பாளர்களுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. பாஜக வேட்பாளர் ஒருவருக்கு வெறும் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்த நிலையில், மற்றொரு வேட்பாளருக்கு ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதில், தனது வாக்கும் குடும்பத்தினரின் வாக்குகளும் கூட காணவில்லை என ஒரு வேட்பாளர் புகார் அளிக்க முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட 10,245 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் […]

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது எழுந்துள்ள புகார் தற்போது காவல் துறை விசாரணைக்கு சென்றுள்ளது. ரூ.4.5 கோடி பணம் வழங்கியதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனவிமல் அளித்த புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல், சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட […]

தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான புதிய கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக திமுக, பாஜக, அதிமுக, விசிக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் எதிர்கால நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் உருவாகக்கூடிய புதிய கூட்டணி வாய்ப்புகள் […]

சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, திமுகவில் அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குப்பெட்டி மூலமாக உட்கட்சித் தேர்தலை நடத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அடைந்த பின்னடைவை அடுத்து, கட்சியின் கிளை முதல் தலைமை நிர்வாகம் வரை உள்ள அனைத்துக் கட்டமைப்புகளையும் சீரமைப்பதற்காக 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்திருந்தார். இக்குழுவினர் கட்சி […]