fbpx

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை….! ஆட்சியர் அறிவிப்பு…!

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர் , திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைத்து கல்லூரிகளும் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

“Disease X”!… இது ஒரு கற்பனை பெயர்!… இதுவரை எங்கும் பரவவில்லை!… மருத்துவ நிபுணர் விளக்கம்!

Tue Oct 3 , 2023
“Disease X”! என்பது உலகின் ஏதொவொரு மூலையில் தற்போது பரவி வரும் தொற்று நோய் கிருமி அல்ல. உலக சுகாதார அமைப்பு அதற்கு கற்பனையான பெயர் சூட்டியுள்ளது என்று நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா விளக்கமளித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றை விட, 20 மடங்கு தீவிரம் வாய்ந்த, ‘டிசீஸ் எக்ஸ்’ தொற்று பரவல் ஏற்படக்கூடும் என்றும், அது உலகம் முழுதும், 5 கோடி உயிர்களை பலி […]

You May Like