மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரியில் இயங்கும் மரபணு ஆய்வகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விவரங்கள்
முதுநிலை ஆய்வக நுட்புனர் (மரபணு)
- கல்வித் தகுதி: மரபணு தொழில்நுட்பத்தில் முதுநிலை பட்டம்
- வயது: 40க்குள்
- மாத ஊதியம்: ரூ.40,000
ஆய்வகம் மற்றும் பண்டக உதவியாளர்
- கல்வித் தகுதி: மருத்துவ ஆய்வகப் பட்டம்
- வயது: 40க்குள்
- மாத ஊதியம்: ரூ.12,000
மண்டல தரக்கட்டுப்பாடு ஆலோசகர்
- கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் / டெண்டல்
- வயது: 40க்குள்
- மாத ஊதியம்: ரூ.40,000
EDSS – LIMS IT ஒருங்கிணைப்பாளர்
- கல்வித் தகுதி: MCA / B.E / B.Tech
- வயது: 35க்குள்
- மாத ஊதியம்: ரூ.16,500
நிபந்தனைகள்:
* அனைத்து பணியிடங்களும் முற்றிலும் தற்காலிகமானவை.
* பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
* பணியில் சேரும்போது சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
* விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்:
- பிறப்புச் சான்று
- மதிப்பெண் பட்டியல்கள் (SSLC, +2, Degree)
- மாற்றுச் சான்றிதழ் (TC)
- சாதி சான்றிதழ் (Community Certificate)
- இருப்பிடச் சான்று
- முன் அனுபவச் சான்று (அரசு வழிகாட்டுதலின்படி)
- சிறப்பு தகுதிக்கான சான்றுகள் (Transgender / Differently abled / Destitute Women / Widow / Ex-Serviceman / Vulnerability Certificate)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
விஸ்வநாதபுரம்,
மதுரை – 625 014.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவங்களை madurai.nic.in/notice category/recruitment/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சுய சான்றொப்பம் செய்யப்பட்ட (Self Attested) நகல்களை இணைத்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.