முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல், மயக்கம் காரணமாக அவர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். கடந்த ஜனவரியிலும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
யார் இந்த மு.க.தமிழரசு? மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசு. இவர் திமுக எந்த பொறுப்பில் இல்லை என்றாலும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்ட தயாநிதி மாறனக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழ் திரைப்படத்தில் டிமாண்டி காலனி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடிகராக நடித்துள்ள அருள்நிதியின் தந்தை தான் மு.க.தமிழரசு என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: குஷியில் நகைப்பிரியர்கள்..! இன்றும் மளமளவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?