தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கீழ்கண்ட தொழிற் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கம்பியாள் தொழிற்பிரிவுற்கு 8- ஆம் வகுப்பிலும் பொருத்துநர், குளிர் பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர், கம்மியர் தானியங்கி வாகனங்கள் வர்ணம் பூசுதல் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு 10 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் அட்டை, முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 50/-(டெபிட் கார்டு / ஜி பே) அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
அரசால் வழங்கப்படும் இலவச சலுகைகள்: பயிற்சிக் காலத்தின் போது பயிற்சியாளர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/-உதவி தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை (Stipend), விலையில்லா பாடப்புத்தகம் (Books), விலையில்லா வரைபட கருவிகள் (Drawing Instrument), விலையில்லா மடிகணினி (Laptop), விலையில்லா சீருடை (Uniform), விலையில்லா மிதிவண்டி (Bi-cycle), விலையில்லா பேருந்து பயண அட்டை (Bus Pass), விலையில்லா மூடுகாலனி (Shoe)
மேலும் பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். பெண்களுக்கு குறைக்த பட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 13.06.2025 ஆகும். எனவே தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் அரூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கையில் சேர்ந்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: செக்..!! விளம்பர பலகைகள் வைக்க உரிமம் பெற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகம்…!