fbpx

கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும்.. ஏன் தெரியுமா??

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு குழந்தை பிறந்த உடன் பல விஷயங்களை குழந்தைக்கு செய்வது உண்டு. இதை பலர் மூட நம்பிக்கை என்று கூறினாலும், இதற்க்கு பின் அறிவியல் சார்ந்த விஷயங்களும் இருப்பது உண்டு. அப்படி நாம் பின் பற்றும் ஒரு பழக்கம் தான் பிறந்த குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது. பொதுவாக கருப்பு கலரில் அரைஞாண் கயிறு கட்டுவது தான் வழக்கம். ஆனால் சிலர் வெள்ளி அல்லது தங்கத்தில் தங்களின் வசதிக்கு ஏற்ப தங்கள் குழந்தைக்கு அரைஞாண் கயிறு கட்டுவார்கள். இப்படி குழந்தையாக இருக்கும் போது கட்டும் அரைஞாண் கயிறு, பலர் எத்தனை வயதானாலும் அணிந்திருப்பது உண்டு. குறிப்பாக ஆண்கள் எத்தனை வயதானாலும் அரைஞாண் கயிறு கட்டி இருப்பார்கள்.

பலர் அரைஞாண் கயிறை கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை என்று கட்டுவார்கள். ஆனால், தற்போது நாகரீகம் என்ற பெயரில் இளம் தலைமுறையினர் அரைஞாண் கயிறை கட்ட விரும்புவது இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு இது வெறும் மூட நம்பிக்கையாக மட்டுமே தெரிகிறதே தவிர அதில் ஒளிந்திருக்கும் மகத்துவம் பற்றி தெரிவதில்லை. ஆனால் அரைஞாண் கயிறு கட்டுவதில் அறிவியல் ரீதியான நன்மைகளும் உள்ளது. ஆம், அரைஞாண் கயிறு கட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடி வயிற்றுப் பகுதி தான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும். மேலும், அரைஞாண் கயிறு காட்டுவதால் ஆண்மை கோளாறுகளை தடுக்க முடியும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதால், அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் முதுகு வலி குறையும் என்று நம் முன்னோர்கள் கூறுவது உண்டு. மேலும் ஆன்மீக ரீதியாக, கருப்பு நிற கயிற்றை அணிந்தால், எதிர்மறை சக்திகள் நம்மை அண்டாது என்பது ஐதீகம்.

Maha

Next Post

இதை மட்டும் செய்யுங்கள்.. பால் பொங்கினாலும் கீழே சிந்தாது..

Thu Oct 5 , 2023
அவசரமான காலை பொழுதில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை பால் காய்ச்சுவது. பால் காய்ச்சுவதில் என்ன பிரச்சனை இருக்கு என்று நீங்கள் நினைக்கலாம். அடுப்பில் பாலை வைத்து விட்டு, அது பொங்குவதர்க்குள் வேறு வேலையை பார்க்க பலர் சென்று விடுவதுண்டு. பால் பொங்கும் வரை அருகில் இருந்து அடுப்பை ஆப் செய்யும் பொறுமை பலருக்கு இருக்காது. நாம் இப்படி செய்யும் போது, பல நேரங்களில் பால் பொங்கி அடுப்பை வீணாக்கிவிடும். […]

You May Like