அடிதூள்.. காப்பீட்டு தொகைக்கு வரி விலக்கு..? GST 2.0 திட்டம் விரைவில்.. எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும்..? 

gst 1751440516 1

மத்திய அரசு, காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 18% இலிருந்து 5% அல்லது பூஜ்ஜியமாக்கும் முன்மொழிவை பரிசீலித்து வருகிறது. இது ஜிஎஸ்டி 2.0 மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இப்போது, காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியம் கட்டும் போது 18% ஜிஎஸ்டி சேர்க்கப்படுகிறது.


உதாரணமாக, ரூ.10,000 பிரீமியம் செலுத்தும் ஒருவர், ஜிஎஸ்டி காரணமாக கூடுதலாக ரூ.1,800 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த வரி 5% ஆகக் குறைக்கப்பட்டால், அந்தச் சுமை வெறும் ரூ.500 ஆகும். இதனால் காப்பீடு வைத்திருப்போருக்கு நேரடியான நிவாரணம் கிடைக்கும்.

புதிய வரி முறை 5% மற்றும் 18% என்ற இரண்டு முக்கிய வரிகளைக் கொண்டிருக்கும். மேலும் ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மது, புகையிலை போன்ற பொருட்களுக்கு 0% வரி விதிக்கப்பட உள்ளது. உணவு, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், எழுதுபொருட்கள், கல்விப் பொருட்கள் மற்றும் பல் துலக்கும் பேஸ்ட், ஹேர் ஆயில் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் தொடர்ந்து வரி விலக்குடன் அல்லது 5% வரியுடன் இருக்கும். தொலைக்காட்சிகள், ஏர் கண்டிஷனர்கள், ஃபிரிட்ஜ் போன்றவை 18% வரியுடன் இருக்கும். வைரங்கள், நகைகள் போன்ற துறைகளுக்கு ஏற்கனவே உள்ள 0.25% மற்றும் 3% வரிகள் தொடரும்.

ஆட்டோமொபைல் துறை: தற்போது அனைத்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கும் 28% ஜிஎஸ்டி உள்ளது. அதனுடன் 1% முதல் 22% வரை இழப்பீட்டு செஸ் விதிக்கப்படுகிறது. இதனால், மொத்த வரி 50% வரை உயரும். எனினும், மின்சார வாகனங்களுக்கு வெறும் 5% ஜிஎஸ்டி மட்டுமே உள்ளது.

இருசக்கர வாகனங்களில் 350 சிசி-க்கு மேல் உள்ள மாடல்களுக்கு மட்டும் 3% செஸ் உள்ளது. ஜிஎஸ்டி 2.0 அமல்பட்டால், 28% வரி நீக்கப்பட்டு 18% ஆக குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை குறையும். இது ஆட்டோமொபைல் சந்தைக்கு புத்துயிர் ஊட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more: ‘சாவு மணி’: ஆன்லைன் கேமிங் தடையால் 2 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.. 400 நிறுவனங்கள் மூடப்படும்.. எச்சரிக்கும் அமைப்புகள்!

English Summary

The central government is considering a proposal to reduce the GST rate on insurance premiums from the current 18% to 5% or zero.

Next Post

#Breaking : தவெக மாநாடு.. 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து.. அப்பளம் போல் நொறுங்கிய கார்..! உயிர்தப்பிய தவெகவினர்! அதிர்ச்சி Video!

Wed Aug 20 , 2025
தவெக மாநாட்டு திடலில் நடப்பட்ட கொடிக்கம்பம் சாய்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை […]
tvk flag accident

You May Like