ட்ரோன் தயாரிப்பு… தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?

Tn Govt 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டதாரிகளுக்கும், டிப்ளமா முடித்தோருக்கும் ட்ரோன் தயாரிப்பு, எம்பெட்டெட் சென்சார் சோதனை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தாட்கோ நிறுவனம், சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெட் டெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் ஆகிய பயிற்சிகளை அளிக்க உள்ளது.

ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், எம்பெட்டெட் சென்சார் சோதனை பயிற்சி, பிரிண்டட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்பு பயிற்சி ஆகியவற்றுக்கு, பொறியியலில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட பயிற்சிக்கான அனைத்து செலவினங்களும் தாட்கோ மூலமாக வழங்கப்படும். மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்பும் தகுதியுள்ள ஆதி திராவிடர்-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தின் (www.tahdco.com) மூலம் பதிவுசெய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பரபரப்பு...! 108 ஆம்புலன்ஸ் ஊழியருக்கு மிரட்டல்...! இபிஎஸ் மீது காவல்நிலையத்தில் புகார்...!

Thu Aug 21 , 2025
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் ஏராளமானோர் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த்திடம் நேற்று புகார் மனு அளித்தனர். புகார் மனு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 18ம் தேதி பிரசாரம் செய்தார். […]
44120714 saamy33

You May Like