அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா அலுவலகம் எதிரே “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பரப்புரையை தொடங்கி, அண்ணா திமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலையை விளக்கியார்.
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுகவின் கோட்டை எனக் குறிப்பிட்டு, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுகவே வெல்லும் எனத் தெரிவித்தார். அதேசமயம், தற்போதைய திமுகவை அவர் கார்பரேட் கம்பேனி என்று விமர்சித்து, ஸ்டாலின் தலைமையில் மக்கள் விருப்பங்களை மீறி வாக்குகளைப் பெறும் மாடல் அரசு அரங்கேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 850 கொலைகள் நடந்துள்ளது. இது போன்றுள்ள சட்டம் ஒழுங்கு சூழ்நிலை முந்தைய எந்த அரசிலும் காணப்படவில்லை. திமுக ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். திமுக ஆட்சி கடைசி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது” என்றார்.
தேர்தல் நெருங்குகிறது என்பதால் மகளிர் உரிமைத்தொகையை விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஆனால் 4 ஆண்டுகளாக ஏன் இந்த திட்டத்தை புறக்கணித்தார்கள் என்பதை மக்கள் கேட்கவேண்டும். மக்கள் அனைவரும் இதை உணர்ந்து, எதிர்வரும் தேர்தலில் திமுகவுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்” என பேசினார்.
தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதுமணத் தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி, பட்டுச் செலை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏற்கனவே தீபாவளிக்கு சேலை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அவ்வப்போடு வாக்குறுதிகளையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அண்ணா திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கினார்.
* 75 கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகத்தை விரிவுபடுத்தியது.
* ஒரே ஆண்டில் பதினோரு புதிய மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் திறப்பு செய்து வரலாற்று சாதனை படைத்தது.
* விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்தது, பேரிடர் காலங்களில் மழை, வெயில், புயல் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டநீட்சி வழங்கியது.
* கொரோனா காலத்தில் வேலை இழந்த மக்களுக்கு விலை இல்லா அரிசி, சக்கரை வழங்கியது.
* தைப்பொங்கல் விழாவுக்கு 2,500 ரூபாய் நிதி உதவி வழங்கியது.
* அரக்கோணம் நகரத்திற்கு 110 கோடி ரூபாய் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது.
* சட்டம் ஒழுங்கை மேம்படுத்தி கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களைக் குறைத்தது என்று அவர் வலியுறுத்தினார்.
மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைத்துக் கொள்வதே 2026 சட்டமன்ற தேர்தலின் முக்கிய குறிக்கோள் என்றும், மக்களின் ஆதரவுடன் மக்கள் நல கூட்டணி வெல்வது உறுதி எனவும் கூறினார். “மோசமான ஆட்சியை தொடர வேண்டுமா? மக்களே எஜமானர்கள். மக்களின் விருப்பம் முதன்மை” என்றும் அவர் தெரிவித்தார்.
Read more: கூட்டுறவுச் சங்கங்களில் காலி பணியிடங்கள்…! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு.…!