பீகார் SIR… எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை…! தேர்தல் ஆணையம் தகவல்…!

Untitled design 5 6 jpg 1

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 20 காலை 11.00 மணி வரை எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் மூலமாக எந்த உரிமை கோரலோ, ஆட்சேபமோ கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நேரடியாக 60,010 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் பெறப்பட்டன. இவற்றில் 2,394 நேர்வுகள் 7 நாட்களுக்கு பின் பைசல் செய்யப்பட்டன.

18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 1,98,660 படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 01 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் நகல் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத காரணங்கள் தெரிவித்து அந்தப் பட்டியல் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் தேடும் வகையில் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களின், இணையதளங்களில் (மாவட்ட வாரியாக) வெளியிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் உரிமை கோரல்களை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்கலாம்.

Vignesh

Next Post

ஜாக்பாட் அறிவிப்பு..!! பொதுத்துறை வங்கிகளில் 10,277 காலியிடங்கள்..!! ரூ.64,480 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

Thu Aug 21 , 2025
நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பணியின் பெயர் : Customer Service Associates (Clerk) மொத்த காலியிடங்கள் : 10,277 பணியிடம் : இந்தியா முழுவதும் (தமிழ்நாடு – 894, புதுச்சேரி – 19 காலியிடங்கள்) கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். […]
Bank Jobs Recruitment.jpg 1

You May Like