ரூ.1.20 லட்சம் சம்பளம்.. பி.டி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம சான்ஸ்..

dentist patient clinic 600nw 2475379775 1

இந்திய ராணுவத்தில் பல் மருத்துவ சேவை பிரிவில் பணியாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.டி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் எம்.டி.எஸ் முடித்தவர்களும் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள்: மொத்தம் 30 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது.

வயது வரம்பு: பல் மருத்துவர் பணியிடங்களுக்கு 31.12.2025 தேதியின்படி, அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:

* இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இந்திய பல் மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த மருத்துவக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளநிலை/ முதுநிலை பல் மருத்துவம் (BDS/MDS) ஆகியவை முடித்திருக்க வேண்டும்.

* பல் மருத்துவராக பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் கட்டாயம் இறுதி ஆண்டில் 55% மதிப்பெண்களுடன் தேர்வு செய்திருக்க வேண்டும்.

* 1 ஆண்டு internship முடித்திருக்க வேண்டும்.

* விண்ணப்பதார்கள் கட்டாயம் NEET (MDS) – 2025 தேர்வில் பங்கேற்று இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

* விண்ணப்பதாரர்கள் NEET MDS (முதுநிலை நீட் தேர்வு) மதிப்பெண்களின் அடிப்படையில் முதன்மையாக குறுக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்படும்.

* நேர்காணலில் பங்கேற்கும் போது, அனைத்து அசல் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

* சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், நேர்காணல் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

* இறுதியாக, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தகுதியானவர்களின் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும்.

சம்பளம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.61,300 முதல் ரூ.1,20,900 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். ஆடை செலவிற்கு ஒரு வருடத்திற்கு ரூ.20,000, போக்குவரத்து செலவு, குழந்தைகள் கல்வி செலவு, தங்குமிடம் செலவு ஆகியவை வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் பல் மருத்துவர்கள் https://join.afms.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: “பேசி பேசியே மயக்கிட்டான்”..!! கர்ப்பமான 15 வயது சிறுமி..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர்..!! சென்னையில் ஷாக் சம்பவம்..!!

English Summary

Salary Rs.1.20 lakh..BDS degree holders can apply..!!

Next Post

மணிக்கணக்கில் Reels, Shorts பார்ப்பதும் போதை தான்! மதுவை விட மூளைக்கு 5 மடங்கு தீங்கு விளைவிக்கும்! எச்சரிக்கும் புதிய ஆய்வு!

Thu Aug 21 , 2025
நம்மில் பலரும் இரவு நேரங்களில் இன்ஸ்டாகிராம் ரீல்கள், டிக்டாக் வீடியோக்கள் அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற வீடியோக்களை ஸ்க்ரோல் செய்து கொண்டிருப்போம்.. இந்த வீடியோக்களை பார்க்க தொடங்கிவிட்டால் நேரம் போவதே தெரியாது.. சில நிமிடங்கள் பார்க்கலாம் என்று நினைத்தால் அது பல மணி நேரம் கழித்தே முடிவடையும்.. இது நேரத்தை வீணடிக்கும் ஒரு தீங்கற்ற வழி என்று தோன்றலாம்.. ஆனால் மூளையில் ஏற்படும் விளைவுகள் நாம் நினைப்பதை விட மிகவும் […]
Watching reels brain 1

You May Like