நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக முடியாது எனவும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்..
இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.. இந்த தேநீர் விருந்தில் அமித்ஷா என்னென்ன பேசினார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது..
நயினார் வீட்டில் ஓரமாக நின்று கொண்டிருந்த அண்ணாமலையை தன்னுடன் அழைத்துக் கொண்டு அமித்ஷா உள்ளே சென்றாராம்.. அப்போது அண்ணாமலை, அமித்ஷாவு வரவேற்பு அளிக்கப்பட்டது.. ஆனால் தேநீர் விருந்தில் அமித்ஷா அப்செட்டில் இருந்தாராம்..
மூத்த தலைவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.. எனவே, தேநீர் விருந்தில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், வானதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எங்கே என அமித்ஷா கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் மூத்த தலைவர்களை இதுபோன்ற நிகழ்வுகளில் ஏன் அழைக்கவில்லை என்றும், அவர்களை அழைத்தா அவர்களுடன் கலந்து பேச முடியும் என்று நயினாரிடம் அமித்ஷா சொன்னதாக கூறப்படுகிறது..
பூத் கமிட்டி கூட்டத்தில் ஏன் நான் பேசும் போது பலர் வெளியே சென்றனர்? அவர்கள் யார்? உண்மையான பூத் கமிட்டி உறுப்பினர்கள் தானா? அப்படி இருந்தால் நான் பேசிய போது வெளியே சென்றிருக்க மாட்டார்களே.. பூத் கமிட்டி கூட்டத்தில் வயதான பெண்கள் இருந்தனர்.. அவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தானா? கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக இப்படி செய்தீர்களா? இது பூத் கமிட்டி கூட்டம், பூத் கமிட்டி உறுப்பினர்களை தான் கூட்ட வேண்டும்..:” என அமித்ஷா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாக சொல்லப்படுகிறது..
அனைவரும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான்.. அனைத்து சரியாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று தமிழக பாஜக மாநில தலைமை அமித்ஷாவிடம் சமாளித்ததாகவும் கூறப்படுகிறது..
Read More : சத்தம் பத்தாது “விசில்” போடு.. 2026 தேர்தலில் தவெக சின்னம் இதுதானா.. ‘டிக்’ செய்த விஜய்..?