மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50 சதவீதம் மானியம்…! ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்…!

money 2025 2

வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.


சமூக நலத்துறையின் சார்பில் மகளிர் வாழ்வாதாரத்தை பொருளாதாரம் ரீதியாக மேம்படுத்த ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு தமிழக அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூலம் 2025-2026-ம் நிதி ஆண்டில் ஆதரவற்ற பெண்கள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு வணிக ரீதியிலான இயந்திரங்கள் பெற 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 1 லட்சத்தி 20 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுடைய பெண்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரத்தை மானிய விலையில் பெற விரும்பும் ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.

Vignesh

Next Post

2026 தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் அதிமுக மூத்த தலைவர்கள்..!! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!!

Sun Aug 24 , 2025
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், மதுரையில் 2-வது மாநில மாநாடு நடத்தி முடித்தப் பின் கொண்டாட்டத்தில் உள்ளார். இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் விஜய் பேசியது பல அரசியல் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடி குறித்து இந்த மாநாட்டில் நேரடியாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்தார். அதேபோல், திமுக – பாஜகவை தொடர்ந்து தற்போது […]
TVK Vijay 2025

You May Like