தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் வீடியோ ஒளிப்பதிவாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் பணி அமர்த்தப்படுவர். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: தமிழ்நாடு அரசு கேமராமேன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஜூலை 1-ம் தேதியில் 35 வயதோ அல்லது அதனை கடக்கும் நிலையிலும் இருக்கக்கூடாது.
கல்வித்தகுதி:
* மாநில தொழில்நுட்ப கல்வியில் Film Technology Cinematography/ Sound Recording & Sound Engineering/ Film Processing ஆகியவற்றில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* இவையில்லாமல், புனேவில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேல் குறிப்பிட்டுள்ள டிப்ளமோ படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* வீடியோ எடுப்பது, ஆவணப்படம், நியூஸ் வீடியோ உள்ளிட்டவற்றில் 2 வருடங்களுக்கு குறையாமல் அனுபவம் தேவை.
சம்பளம்: வீடியோ ஒளிப்பதிவாளர் பதவிக்கு நிலை 15 கீழ் ரூ.36,200 முதல் ரூ.1,33,100 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல சம்பளத்தில் அரசு வேலையை பெற முடியும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் வயது தளர்வுகள் அரசு விதிகளின்படி பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 08.09.2025 மாலை 4 மணி வரை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமைத் தயாரிப்பாளர்,
தமிழ்நாடு திரைப்படப்பிரிவு,
கலைவாணர் அரசங்க வாளகம்,
வாலாஜா சாலை, சென்னை – 600 002.
Read more: Flash: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம்.. ISRO-வின் முதல் சோதனை வெற்றி..!!