நேற்று வானில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தலைமை காஜி அறிவிப்பின்படி, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாதுன் நபி கொண்டாடப்பட உள்ளது. இறைத் தூதர் நபி முகமது அவர்கள் பிறந்த நாளைக் குறிக்கும் இந்த நாளில், இஸ்லாமியர்கள் புனித குர்ஆனை வாசித்து, இறைவனைத் தொழுது சிறப்பு வழிபாடுகளை நடத்துவது வழக்கம்.
இவ்வாறு, உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடும் மிலாதுன் நபி பண்டிகை, தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழக அரசு அந்த நாளை அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி: இறைத்தூதரான நபிகள் நாயகம் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்ததோடு, மறை நூலான திருக்குர்ஆனை உலகுக்கு அறிவித்தவர். இவரது பிறந்தநாள், மிலாடி நபியாக கொண்டாடப்படுகிறது. கி.பி. 570-ம் ஆண்டு ரபி உல் அவ்வல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12-ம் நாளில் மக்கா நகரில் நபிகள் நாயகம் அவதரித்த நாளையே மிலாடி நபியாக இஸ்லாமிய மதத்தினர் கொண்டாடுகின்றனர். மிலாடி நபி அன்று புனித நூலான குர்ஆனை வாசிப்பது இஸ்லாமியர்களிடம் கடமையாக பார்க்கப்படுகிறது.
Read more: தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதோ..!