சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் உள்ள நிபுணர்கள், உதவியாளர் மற்றும் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அறிவித்துள்ளது.
பதவிகள் மற்றும் தகுதிகள்
நிபுணர்கள் (Experts)
மக்கள் தொடர்பியல் & பொது விழிப்புணர்வு
- இதழியல்/மக்கள் தொடர்பியல்/தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம்.
- குறைந்தபட்சம் 5 வருட அனுபவம்.
- தமிழ் & ஆங்கிலத்தில் சிறந்த தகவல் பரிமாற்ற திறன் அவசியம்.
தரவு கண்காணிப்பு & ஆவணப்படுத்தல்
- கணினி அறிவியல் / புள்ளியியல் / டேட்டா சயின்ஸ் / கணிதம் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம்.
- குறைந்தபட்சம் 5 வருட அனுபவம்.
- டேட்டா அனாலிசிஸ், டிஜிட்டல் தளம், கணினி திறன் அவசியம்.
சாலை பாதுகாப்பு அம்சங்கள்
- சிவில் பொறியியல் இளங்கலைப் பட்டம் (முதுகலை இருந்தால் சிறப்பு).
- குறைந்தபட்சம் 5 வருட அனுபவம்.
- தமிழ் & ஆங்கிலத் திறன் மற்றும் கணினி பயன்பாட்டு திறன் தேவை.
உதவியாளர் (Assistant)
- ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் (முதுகலை இருந்தால் சிறப்பு).
- 3 வருட நிர்வாக அனுபவம்.
- தட்டச்சு, கணினி மற்றும் தொடர்பாடல் திறன் அவசியம்.
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் (Data Entry Operator)
- இளங்கலை / முதுகலைப் பட்டம் அல்லது கணினி பயன்பாடு/IT-இல் டிப்ளமோ.
- PGDCA/DCA சான்றிதழ் ஏற்கப்படும்.
- 3 வருட அனுபவம் (டேட்டா மேனேஜ்மெண்ட்/அலுவலக உதவி/நிர்வாக பணி).
சம்பளம்:
* நிபுணர்கள் பதவிக்கு மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம்.
* உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்.
* டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்கள் 12 மாதங்களுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசின் கீழ் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் உள்ள இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை https://www.tn.gov.in/job_opportunity.php என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து tnrsmu2025@gmail.com என்ற இமெயில் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி: செப்டம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
Read more: Wow! ரூ.39,999க்கு ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ரூ.20க்கு 100 கிமீ மைலேஜ்! முழு விவரம் இதோ..!