இன்னும் 2 மாநாடு நடத்தினாலே போதும்.. விஜய் காலி டப்பா ஆகிவிடுவார்.. அமைச்சர் சேகர்பாபு அட்டாக்!

vijay sekar babu

விஜய் இன்னும் 2, 3 மாநாடு நடத்தினாலே அவர் பெருங்காய டப்பா போல் காலி டப்பா ஆகி விடுவார் என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.

அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அமைச்சர் “ விஜய் இப்போது 2 மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார்.. இப்போதே நரியின் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும், ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் என்பது போல் அனைத்து தரப்பு விமர்சனங்களையும் பெற்றுள்ளார்.. இன்னும் 2, 3 மாநாடு நடத்தினாலே அவர் பெருங்காய டப்பா போல் காலி டப்பா ஆகி விடுவார் என்பதே என் கருத்து..


முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புகழ் கூடி, இமயமலை உச்சியில் பறந்து கொண்டிருக்கிறது.. இன்றைக்கூடி பசியறியா மழலைச் செல்வங்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்.. பஞ்சாப் முதல்வர் இந்த திட்டத்தை தங்கள் மாநிலத்திலும் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்.. இன்று திராவிட மாடல் அரசு, ஒன்றியத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன்னோடியாக திகழ்கிறது..

விஜய்யின் சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. 2026 களத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம்.. இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசும் விஜய்யை களத்திலே சந்திப்போம்.. தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி உறுதி என்பதை நிரூபிப்போம்..” என்று தெரிவித்தார்..

Read More : அப்பா VS மகன் இல்ல.. அக்கா VS தம்பி.. பாமகவில் கிளம்பி உள்ள புதிய புயல்..? அன்புமணிக்கு செக் வைக்கும் ராமதாஸ்!

RUPA

Next Post

உடற்பயிற்சி கருவியை பயன்படுத்துவதில் மோதல்.. ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்..!! பகீர் வீடியோ..

Tue Aug 26 , 2025
Gym Chaos! Group Suddenly Assaults Man, Beat Him Up Brutally with an Iron Rod
gym

You May Like