நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள லோஹியா மருத்துவமனையில் பல மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, ஒரு பெண் மருத்துவருக்கு 5,000க்கும் மேற்பட்ட ஆபாச செய்திகளை அனுப்பி உள்ளார். மேலும் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை செய்து துன்புறுத்தி உள்ளார்.
மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் பெண் மருத்துவர் தனது அழைப்பை மறுத்ததால், ஆத்திரமடைந்த நோயாளி அவரை மிரட்டி உள்ளார்.. மேலும், உயிருக்கு ஆபத்தான தாக்குதலையும் பெண் மருத்துவர் மீது நடத்தி உள்ளார்.. இந்த கொடுமைகளை தாங்க முடியாத அந்த பெண் மருத்துவர்கள், அந்த சைக்கோ நோயாளி குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.. இந்த புகாரின் பேரில் விபூதிகண்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு . வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்..
விபூதிகண்ட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுனில் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது “ குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் திவாரி பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல மாதங்களுக்கு முன்பு லோஹியா மருத்துவமனையில் மகேஷ் அறுவை சிகிச்சை செய்திருந்தார். அவருக்கு அந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்தார். சிகிச்சையின் போது மகேஷ் மருத்துவரின் எண்ணைப் பெற்று அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார்.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி, அவர் பணி முடிந்து, சிறிது தொலைவில் உள்ள தனது பிளாட்டுக்குச் செல்ல புறப்பட்டபோது, மகேஷ் திவாரி அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் லிஃப்டுக்காக அந்த பெண் மருத்துவர் காத்திருந்தபோது, மகேஷ் அவரை பின்னால் இருந்து தாக்க முயன்றார். ஒரு காவலர் அவனைத் துரத்திச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தார். போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்..” என்று தெரிவித்தார்.
தன்னை மகேஷ் திவாரி நீண்ட காலமாக துன்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் காவல்துறையில் தெரிவித்தார்.. மேலும் அவர், மே 12 ஆம் தேதி பெண்கள் உதவி எண் 1090 இல் புகார் அளித்திருந்தார். போலீசார் மகேஷுக்கு தொலைபேசியில் அழைத்து ஆலோசனை வழங்கினர். அவர் சில நாட்கள் அமைதியாக இருந்தார், ஆனால் பின்னர் மீண்டும் தனது வேலையை காட்ட தொடங்கினார்..
மகேஷ் மிகவும் வெறித்தனமாக இருந்ததால், பஸ்தியிலிருந்து லக்னோவுக்குச் சென்று, மருத்துவமனைக்கு வெளியே நின்று மருத்துவரை எதிர்பார்த்து, அவர் வெளியே வரும்போது அவரை பின்தொடர்ந்து சென்றார்.. மகேஷின் நடத்தையால் பெண் மருத்துவர் தனது உயிருக்கு பயப்படத் தொடங்கினார். மேலும் தனியாக வெளியே செல்ல பயந்தார். மருத்துவமனையில் இருந்து தனது பிளாட்டுக்குத் திரும்பும்போது, அவள் பாதுகாப்புக்காக மருத்துவமனையில் இருந்து ஒரு காவலரை அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்..
Read More : மனைவியின் ஆசைக்கு தடையான கணவன்..!! சிதறி கிடந்த உடல் பாகங்கள்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!