தமிழக அரசு வழங்கும் வைக்கம் விருது…! செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

Tn Govt 2025

வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்களை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.


கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ சமூகநீதி நாளான செப்.17-ம் தேதி அரசால் வழங்கப்படும்’’ என்று 110-விதியின் கீழ் அறிவித்தார். இந்த நிலையில் வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்களை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ சமூகநீதி நாளான செப்.17-ம் தேதி அரசால் வழங்கப்படும்’’ என்று 110-விதியின் கீழ் அறிவித்தார்.

அந்த வகையில் நடப்பாண்டும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் தங்கப் பதக்கம் உள்ளடக்கிய விருது முதல்வரால் வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்புவோர், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன், பொதுத்துறை செயலாளரிடம் செப்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வீடு கட்டுவதில் அடிக்கடி தடையா..? 16 வகையான தோஷங்களை நீக்கும் பூமிநாதர் திருக்கோயில்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Wed Aug 27 , 2025
வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது அனைவரது கனவாக இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு பலருக்கு இன்றும் எட்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கான இடமோ, அதற்கான யோகமோ இருக்கிறது. ஆனால் தொடங்கும் முயற்சிகள் தடைகளை சந்திக்கின்றன. மனையின் சட்ட பிரச்சனைகள், வாஸ்து குறைபாடுகள், குடும்ப பாகப்பிரிவுகள் என பல காரணங்களால் தடைபடுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் ஒரு விசேஷமான தலம் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் […]
colourful temple gopurams srirangam trichy 600nw 1697136448 1

You May Like