தமிழ்நாடு அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் முதலிடத்தை பிடித்திருப்பது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இத்திட்டம் மூலம் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு மகளிருக்கு ஒரு இனிய செய்தியை அறிவித்துள்ளது. வழக்கமாக, மாதந்தோறும் 15 ஆம் தேதி தான் அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரை வைக்கப்படும். ஆனால், இம்முறை தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், முன்கூட்டியே, அதாவது நவம்பர் 10ஆம் தேதியே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி வருவதை முன்னிட்டு, பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. பண்டிகை முன்னேற்பாடுகளுக்காக வீட்டு செலவுகளை முன்னதாகச் செய்துவைக்க மக்கள் விரும்புவதால், பெண்களின் தேவையை புரிந்துகொண்ட அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பயனாளிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Read More : பெண்களே..!! உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், நீளமாகவும் வளர இதை ஃபாலோ பண்ணுங்க..!! முற்றிலும் இயற்கையானது..!!