மத்திய அரசின் கீழ் செயல்படும் பொது சேவை ஒளிபரப்பாளரான பிரசார் பாரதியில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடவிவரம்:
உதவி AV எடிட்டர் – 15
காப்பி எடிட்டர் – 18
காப்பி எடிட்டர் (இந்தி) – 13
எடிட்டோரியல் நிர்வாகிகள் (ஆங்கிலம்) – 5
எடிட்டோரியல் நிர்வாகிகள் (இந்தி) – 3
விருந்தினர் ஒருங்கிணைப்பாளர் – 2
செய்தி வாசிப்பாளர் (ஆங்கிலம்) – 11
செய்தி வாசிப்பாளர் உடன் மொழிப்பெயர்பாளர் (இந்தி) – 14
செய்தி வாசிப்பாளர் உடன் மொழிப்பெயர்பாளர் (சமஸ்கிருதம்) – 3
செய்தி வாசிப்பாளர் உடன் மொழிப்பெயர்பாளர் (உருது) – 8
செய்தியாளர் (வணிகம்) – 2
செய்தியாளர் (ஆங்கிலம்) – 8
செய்தியாளர் (சட்டம்) – 3
செய்தியாளர் (விளையாட்டு) – 2
வயது வரம்பு: ஆகஸ்ட் 20-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சமஸ்கிருதம் பிரிவிற்கு மட்டும் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி மற்றும் தகுதிகள்:
உதவி AV எடிட்டர் (Assistant AV Editor):
- பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது ஒலி/வீடியோ எடிட்டிங்கில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 2 வருட அனுபவம் தேவை.
காப்பி எடிட்டர் (Copy Editor):
- இதழியியல் அல்லது மக்கள் தொடர்பியலில் பட்டப்படிப்பு / பிஜி டிப்ளமோ இருக்க வேண்டும்.
- ஆங்கிலம் மற்றும் இந்தி மொழித் திறன், கணினி அறிவு, தட்டச்சுத் திறன் அவசியம்.
- 2 வருட அனுபவம் தேவை.
எடிட்டோரியல் நிர்வாகிகள் (Editorial Executives):
- பட்டப்படிப்பு / இதழியியலில் பிஜி டிப்ளமோ.
- 2 வருட அனுபவம் அவசியம்.
விருந்தினர் ஒருங்கிணைப்பாளர் (Guest Coordinator):
- பட்டப்படிப்பு அல்லது இதழியியல் டிகிரி / பிஜி டிப்ளமோ.
- 2 வருட அனுபவம் தேவை.
செய்தி வாசிப்பாளர் (News Reader):
- பட்டப்படிப்பு அல்லது இதழியியல் / மக்கள் தொடர்பியல் டிகிரி / பிஜி டிப்ளமோ.
- 2 வருட அனுபவம் தேவை.
செய்தியாளர் (Reporter):
- பட்டப்படிப்பு அல்லது இதழியியல் / மக்கள் தொடர்பியல் டிகிரி அல்லது டிப்ளமோ.
- இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி அவசியம்.
- 2 வருட அனுபவம் தேவை.
சம்பள விவரம்: உதவி AV எடிட்டர் பதவிக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்படும். காப்பி எடிட்டர், எடிட்டோரியல் நிர்வாகிகள், விருந்தினர் ஒருங்கிணைப்பாளர், செய்தி வாசிப்பாளர் பதவிகளுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். செய்தியாளர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://avedan.prasarbharati.org/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Read more: நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடவே கூடாது.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!