வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்.. உடனே நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

tn govt 20251 1

வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர்பாக, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: வருவாய்த் துறையில் உள்ள மாவட்டங்களில் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளருக்கு (General Personal Assistant) ஏற்கனவே அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக அந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட விவரங்களை விரைவில் அறிக்கையாக அரசுக்கு அனுப்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்புவது தொடர்பான இந்த உத்தரவு, பணியாளர் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த வருவாய்த் துறையின் பணிகள் சீராக நடைபெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more: இனி நகையே வாங்க முடியாது போல! ஒரே நாளில் ரூ.520 உயர்ந்த தங்கம் விலை.. பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

English Summary

The Tamil Nadu government has ordered the immediate filling of vacant office assistant posts in the revenue department.

Next Post

இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்கள் இவை தான்! பாதுகாப்பற்றவை எவை? முழு லிஸ்ட்..!

Fri Aug 29 , 2025
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன.. மத்திய, மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்புக்காக பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை அனைத்து வயது தரப்பு பெண்களுக்கும் ஒரு வித பயத்துடனே வெளியே சென்று வர முடிகிறது.. இந்த நிலையில், இந்திய நகரங்கள் பெண்களுக்கு உண்மையில் எவ்வளவு […]
women safety cities

You May Like