25 வயதிற்கு மேல் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் தமிழக அரசின் சூப்பர் திட்டம்…! முழு விவரம்

Magalir Urimai Thogai 4 2024 06 13959d94ae85e2aed3566ce5d26fd069 1

சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


2025 – 2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/- மானியத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தேவையான சான்றிதழ்கள்:-

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்கண்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூர்வீகமாக (பிறப்பிடச்சான்று). வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று. திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள். ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச்சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்.

Vignesh

Next Post

குழந்தைகள் சுவரில் பென்சில், க்ரையான்ஸ்களால் கிறுக்கிவைத்து விடுகிறார்களா?. பெயிண்டை சேதப்படுத்தாமல் நீக்குவது எப்படி?.

Sat Aug 30 , 2025
குழந்தைகள் விளையாடுவது என்பது வெறும் மகிழ்ச்சிக்காக மட்டும் அல்ல, அவர்களின் அறிவை வளர்க்கும் செயல்களில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குழந்தை பிறந்து முதல் 3 ஆண்டுகளில் அதாவது ஒரு வயது முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை திறன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களின் அறிவு திறனை வளர்க்க பெற்றோர் அதிகம் பாடுபட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் இங்கு வேடிக்கையான விஷயம். இருப்பினும், […]
Remove Color Marks from Walls 11zon

You May Like