திரை பிரபலங்கள் தொடங்கி, அரசியல்வாதிகளின் இல்லத் திருமணங்கள் வரை அனைத்து விழாக்களிலும் மாதம்பட்டி ரங்கராஜின் உணவு தான் பேமஸ். சமையல் துறையில் நீண்ட நாட்களாக கொடி கட்டி பறக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இருப்பினும் அந்த படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.
அதன் பிறகு கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். அதன் பிறகு தமிழக முழுவதும் பிரபலமான ஒரு செலிபிரேட்டியாக மாறி உள்ளார். ஏற்கனவே பிரபலமாக இருப்பினும் இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமாகி உள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு மகன்களும் உள்ளனர். சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
அந்த சர்ச்சைக்கு மத்தியில் மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிஸில்டாவும் கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மாதம்பட்டி ரங்கராஜனின் இரண்டாவது மனைவி அறிவித்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் அளித்தார் ஜாய்.
இந்த விவகாரம் குறித்து ரங்கராஜ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், அப்பாவின் அலப்பறைகள் என்று மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஜாய். அந்த வீடியோவில், என்னடி பண்ற பொண்டாட்டி, லவ் யூ, மிஸ் யூ.. நான் ரூம்க்கு வந்து குளிச்சு, சாப்பிட்டு, காபி குடிச்சுட்டேன்.. என கூறி வீடியோவில் முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல, “மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி” என்பதை தனது பயோவில் போட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட, “நான்தான மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி” என்று இன்ஸ்டாவில் கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். ஜாய் கிரிஸில்டாவின் குற்றசாட்டுக்கு ரங்கராஜ் மெளனம் காப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read more: டீ 15 ரூபாய்.. காபி 20 ரூபாய்.. நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு.. கதறும் தேநீர் பிரியர்கள்..!!