டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் அபாயக் குறி அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஹரியானாவில் உள்ள ஹதினிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் யமுனை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நீர்மட்டம் எச்சரிக்கை அளவை விட 1.3 மீட்டர் குறைவாகவும், அபாய அளவான 205.3 மீட்டரை விட 2 மீட்டருக்கும் அதிகமாகவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது, சனிக்கிழமை மாலை 5 மணியளவில் 203.2 மீட்டராக உயர்ந்துள்ளது, இது 204.5 மீட்டரின் எச்சரிக்கை குறியை விட ஒரு படி மேலே உள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
2023 ஆம் ஆண்டில், தேசிய தலைநகரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கை சந்தித்தது, அப்போது யமுனையின் நீர்மட்டம் 208.6 மீட்டரை எட்டியது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இதற்கிடையில், கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் 260க்கும் மேற்பட்ட சாலைகள் தடைபட்டுள்ளதாகவும், மண்டியில் மட்டும் 176 சாலைகள் தடைபட்டுள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதை அடுத்து, மோசமான வானிலை காரணமாக சார் தாம் யாத்திரை தடைபட்டது, மேலும் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் உணவு மற்றும் தானிய பற்றாக்குறை ஏற்பட்டது.