தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தின் மூலமாக கட்சி நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் அமைதியாக இருந்த செந்தில் பாலாஜி தற்பொழுது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், மாற்றுக்கட்சியினர் மற்றும் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக கரூர் கோவையில் முகாமிட்ட செந்தில் பாலாஜி மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக, தேமுதிக, தவெக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். கரூர் மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, மாவட்ட மாணவரணி செயலாளர் உள்ளிட்ட 21 தேமுதிகவினரும், அதிமுக பாஜகவை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரும், தவெகவை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோரும், பாமகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
Read more: நாடு முழுவதும் இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை நிறுத்தம்…!