திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் இரவோடு இரவாக திமுகவில் இணைந்தனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கிய நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் நிலைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின், கட்சியிலும் […]

செந்தில் பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட மதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். கூட்டணி கட்சியான மதிமுக நிர்வாகிகளை திமுக தன் கட்சியில் இழுத்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பொதுச்செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை இடம் தராததால் திமுக மீது அதிருப்தியில் […]

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. […]

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட 12 பேருக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்தாண்டு அமலாக்கத் துறை […]

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்க்கும் விதமாக, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆக்குணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்ற ஒரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது இல்லை என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு […]

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உள்ளனர். அமலாக்கத் துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் இரண்டு நீதிபதிகளும் […]