தோழி கல்யாணத்திற்கு வர மறுத்த கணவன்.. திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

marriage death

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் கோகுல் (26). இவர் தனது காதலியான சவுந்தர்யா (24) என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஆழ்வார் திருநகரில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் நேற்று இரவு சவுந்தர்யா தனது தோழியின் திருமண விழாவுக்கு செல்ல கணவரை அழைத்துள்ளார். ஆனால் கோகுல் வர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையேமீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சவுந்தர்யா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கோகுலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தோழியின் திருமண விழாவுக்கு கணவர் வர மறுத்ததால் மன வேதனை அடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.. திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிய நிலையில் இந்த தற்கொலை நடந்ததால், அரசு விதிமுறைகளின்படி ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்திய ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

Read more: அடேங்கப்பா.. கார்த்திகை தீபம் சீரியல் நட்சத்திரங்களின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா..?

English Summary

Husband refuses to come to friend’s wedding.. Young woman makes bizarre decision 3 months into marriage..!

Next Post

‘வெளிப்படையான பயங்கரவாத ஆதரவை ஏற்க முடியுமா?’: பாகிஸ்தான் பிரதமர் கலந்து கொண்ட SCO கூட்டத்தில் மோடி கேள்வி..

Mon Sep 1 , 2025
சீனாவில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை கடுமையாகக் கண்டித்தார்.. மனிதகுலத்திற்கு “மிகக் கடுமையான கவலை” என்றும் பிரதமர் மோடி கூறினார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு 26 பேர் பலியாகியதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா” என்று கேட்டார். பாகிஸ்தான் பிரதமர் கலந்து […]
pm modi sco meet 1

You May Like