அதிமுகவை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற நோக்கில் ஜெயலலிதா மறைவிற்கு பின் அமமுக என்ற கட்சியை தொடங்கினார் டி.டி.வி.தினகரன். 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்ட நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இணைந்தது போட்டியிட்டனர்.
சமீபத்தில் கூட்டணியில் முக்கியதுவம் அளிக்கப்படவில்லை எனக் கூறி ஒபிஎஸ் அணி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் “நீங்கள் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறீர்களா?” என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் “நான் என்.டி.ஏ-வில் இருக்கிறேனா இல்லையா என்பதற்கு நாயினார் நாகேந்திரன் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவோம்,” என்று பதிலளித்தார். இந்நிலையில் டிடிவி தினகரன் NDA கூட்டணியில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார். நெல்லையில் இது தொடர்பாக பேசிய அவர், 2024 தேர்தலில் இருந்து தங்களுடன் பயணிக்கும் அவர், எங்களுடன்தான் இருக்கிறார்.
திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதே எங்களின் நோக்கம்.
திமுக ஆட்சி மீது மக்கள் 100% வெறுப்போடு இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா என எல்லா நாடுகளுக்கும் போய் வந்திருக்கிறார். வழக்கம்போல போய்விட்டு சும்மாதான் வருவார்” எனத் தெரிவித்துள்ளார்.
Read more: ரூ.20 முதலீட்டில் ரூ.34 லட்சம் சம்பாதிக்கலாம்.. அட்டகாசமான SIP திட்டம்..!!