அஸ்வினி முதல் ரேவதி வரை.. எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்..?

temple 1 2

ஜோதிட சாஸ்திரப்படி 27 நட்சத்திரங்களும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு நட்சத்திரமும் பெண்களின் பெயர்களால் அழைக்கப்படுகின்றன என்ற ஐதீகமும் உள்ளது. அந்த 27 பெண்களும் 27 கோவில்களில் வழிபட்டு நட்சத்திர அந்தஸ்தை பெற்றதாக நம்பப்படுகிறது.


அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அந்த நட்சத்திரத்திற்குரிய ஆலயங்களில் வழிபட்டால் வாழ்க்கையில் பல நன்மைகள், அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எல்லோராலும் அனைத்து ஆலயங்களுக்கும் செல்வது சாத்தியமில்லை. எனினும், தங்களுக்கு அருகிலுள்ள அல்லது செல்லக்கூடிய கோவில்களில் குறைந்தது ஒன்றிற்காவது சென்று வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

பிறந்த நட்சத்திரம், ராசி ஒரே மாதிரியாக இருந்தாலும், பிறந்த நேரம், தேதி, லக்னம் ஆகியவற்றின் அடிப்படையில் குணாதிசயங்கள், வாழ்க்கை மாறுபடும் என்பது ஜோதிட சாஸ்திர விளக்கம்.

நட்சத்திரங்களுக்கு உரிய ஆலயங்கள்:

அஸ்வினி: கூத்தனூர், ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை

பரணி: நல்லாடை, திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்

கார்த்திகை: கஞ்சானகரம், காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்

ரோஹிணி: திருக்கண்ணமங்கை, காஞ்சிபுரம், திருவானைக்காவல், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், ஸ்ரீரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி

மிருகசீரிடம்: எண்கண், அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை

திருவாதிரை: சேங்காலிபுரம், சிதம்பரம், அதிராம்பட்டினம்

புனர்பூசம்: சீர்காழி, பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்

பூசம்: திருச்சேறை, விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர்கோவில்

ஆயில்யம்: திருப்புறம்பியம், திருந்துதேவன்குடி, நண்டான் கோவில், சங்கரன்கோவில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை

மகம்: திருவெண்காடு, திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு

பூரம்: தலைசங்காடு, நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்

உத்திரம்: கரவீரம், காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்

அஸ்தம்: தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர், எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு

சித்திரை: திருவையாறு, அண்ணன்கோவில், தாடிக்கொம்பு, திருநாராயணபுரம், நாச்சியார்கோவில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு

சுவாதி: திருவிடைமருதூர், திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார்கோவில், ஸ்ரீரங்கம்

விசாகம்: கபிஸ்தலம், திருமலை திருப்பதி, அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்

அனுஷம்: நாச்சியார்கோவில், திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்

கேட்டை: வழுவூர், பிச்சாண்டார் கோவில், பசுபதி கோவில், பல்லடம், திருப்பராய்த்துறை

மூலம்: மயிலாடுதுறை, மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர் மம்பேடு

பூராடம்: கடுவெளி, சிதம்பரம், இரும்பை மகாகாளம்

உத்திராடம்: இன்னம்பூர், கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவனம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்

திருவோணம்: திருவிடைமருதூர், ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்

அவிட்டம்: திருபூந்துருத்தி, விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி

சதயம்: திருப்புகலூர், கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோவில், மேலக்கடம்பூர், பிச்சாண்டார் கோவில், மதுரை

பூரட்டாதி: திருக்குவளை, ரெங்கநாதபுரம்

உத்திரட்டாதி: திருநாங்கூர், தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோவில்

ரேவதி: இலுப்பைப்பட்டு, காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

Read more: NDA கூட்டணியில் அமமுக இல்லையா..? – நயினார் நாகேந்திரன் பரபர பேட்டி..!

English Summary

From Ashwini to Revathi.. which temple should people born under which star go to..?

Next Post

2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக செய்த ஊழல் முறையாக விசாரித்து நடவடிக்கை...! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

Tue Sep 2 , 2025
திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி; “மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய […]
Eps

You May Like