தூள்..! ரயில்வே ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு சலுகைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்…!

reels railway 2025

ரயில்வே ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு சலுகைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் ரயில்வே மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கையெழுத்தானது.


உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றான இந்தியன் ரயில்வே மற்றும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகிய இந்தியாவின் இரண்டு முன்னணி நிறுவனங்களிடையே இன்று ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், எஸ்பிஐ-இல் ஊதியக் கணக்குகளைப் பராமரிக்கும் ரயில்வே ஊழியர்களுக்கான காப்பீட்டுத் தொகை கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. விபத்தின்போது உயிரிழப்பு ஏற்பட்டால், மத்திய அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் ஏ, பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1.20 லட்சம், ரூ.60,000 மற்றும் ரூ.30,000 காப்பீட்டுத் தொகையுடன் ஒப்பிடும்போது, காப்பீட்டுப் பலன் ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, எஸ்பிஐ-இல் ஊதியக் கணக்கு மட்டுமே வைத்திருக்கும் அனைத்து ரயில்வே ஊழியர்களும் இப்போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள இயற்கை மரண காப்பீட்டுத் திட்டத்திற்கும் தகுதிபெறுவார்கள். இதற்காக எந்த பிரீமியமும் செலுத்த வேண்டாம், எந்த மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியதில்லை.

எஸ்பிஐ-இல் கிட்டத்தட்ட 7 லட்சம் ரயில்வே ஊழியர்கள் சம்பளக் கணக்குகளைப் பராமரிப்பதால், இந்த ஒப்பந்தம் ஊழியர் நலனுக்கான ஒரு முக்கிய முயற்சியைக் குறிக்கிறது, இது இந்திய ரயில்வேக்கும் எஸ்பிஐ-க்கும் இடையிலான அக்கறையுள்ள மற்றும் ஆக்கபூர்வமான கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது. ஊழியர்களை மையமாகக் கொண்டு, இரண்டு முன்னணி நிறுவனங்களுக்கு இடையிலான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஊழியர்களுக்கு, குறிப்பாக பிரிவு சி உள்ளிட்ட ரயில்வே முன்கள பணியாளர்களுக்கு பிரத்யேக நன்மைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அதிமுக - பாஜக கூட்டணியில் சர்ச்சை.. பாஜக முக்கிய தலைவர்களை பிராச்சார வாகனத்தில் ஏற்க மறுத்த EPS..!!

Tue Sep 2 , 2025
Controversy in AIADMK-BJP alliance.. EPS refuses to accept key BJP leaders in campaign vehicle..!!
Eps

You May Like