fbpx

ஜெயலலிதாவுக்கு எதிராக கொலை வெறி தாக்குதல்..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் ஓபிஎஸ்..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2008இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றபோது அவருடைய வாகனம் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட போது நேரில் பார்த்த சாட்சிகளாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், முக்கிய சாட்சியான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேவர் குருபூஜைக்கு சென்ற போது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் நேரில் பார்த்த சாட்சியம் என்றதால், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோ கண்காட்சி மூலம் சாட்சியம் அளித்ததாக தெரிவித்தார்.

Chella

Next Post

ஒரு முட்டை சாப்பிட்டால், ரூ.1 லட்சம் பரிசா!!! வித்தியாசமான போட்டியை அறிவித்த கடைக்காரர்.. எங்கு தெரியுமா??

Fri Oct 13 , 2023
பலருக்கு பிடித்த உணவுகளில் ஒன்ற முட்டை. ஆம், முட்டையை பலர் உணவாகவே சாப்பிடுவது உண்டு. மேலும், முட்டை இல்லாமல் உணவே சாப்பிட மாட்டேன் என்று முட்டை வெறியர்களும் பலர் உண்டு. முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆம், தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைத்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும். முட்டை சாப்பிட்டால் மூளை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன் அதன் ஆற்றலும் […]

You May Like