வீடியோ வந்தாச்சு..!! வாட்டர்மெலன் ஸ்டார், கூமாப்பட்டி தங்கபாண்டி..!! பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்கள் தான்..!!

BB 9 2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், கடந்த சீசன் போல, இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார்.


இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை இருப்பவருக்கே ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

கடந்த 8-வது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக திகழ்ந்தார். இதையடுத்து, தற்போது பிக்பாஸ் 9-வது சீசனில் பங்கேற்கப்போகும் புதிய முகங்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, நிகழ்ச்சிக்கான ஆடிஷன்கள் முடிவடைந்து, பங்கேற்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 9 வீட்டில் இந்த முறை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் களமிறங்குவார்கள் என தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் பிரபலமான வாட்டர்மெலன் ஸ்டார் என்று அழைக்கப்படும் திவாகர், பிக்பாஸ் வீட்டில் இடம் பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Subscribe to my YouTube Channel

மேலும், கூமாப்பட்டி தங்கபாண்டி, பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா ஆசாத், மற்றும் குக் வித் கோமாளி 6-ல் பங்கேற்ற உமைர் லத்தீஃப், ஷபானா ஷாஜஹான் ஆகியோரும் ஆடிஷனில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில், போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : கள்ளக்காதலனுடன் ஓடிப்போன 2-வது மனைவி..!! விதவையுடன் 3-வதாக மலர்ந்த காதல்..!! கூடவே வந்த மற்றொரு காதலன்..!! கடைசியில் ஷாக்..!!

CHELLA

Next Post

உலர் திராட்சையை இப்படி சாப்பிட்டால் இதய நோய் பாதிப்பே வராது..!! தினமும் காலையில் இதை மட்டும் பண்ணுங்க..!!

Tue Sep 2 , 2025
இரவு முழுவதும் உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதில் அயன், பொட்டாசியம், கால்சியம், மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், உடலின் பல்வேறு மண்டலங்களுக்கும் நேரடி நன்மை தரும் தன்மை பெற்றது. உலர் திராட்சை தண்ணீரில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள், உடலை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் சக்தியை […]
Dry Grapes 2025

You May Like