மக்களே உஷார்…! இந்த லிங்க பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்த வேண்டாம்…! மின் வாரியம் எச்சரிக்கை…!

EB Bill 2025

மொபைல் போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரியம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அந்த பதிவில், மின் கட்டணத்தை செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வ TNEB மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல முடிவு பெறாத மற்றும் தாமதமான பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும்.


உங்களுக்கான சிறந்த சேவையை பெறுவதற்கு மின் இணைப்பு விண்ணப்பிக்கும் போது கணினி மையம் அல்லது முகவர்களின் மொபைல் எண்ணை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம். உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மட்டுமே குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். அதேபோல வீடுகளுக்கு வரும் மின்சார கட்டண நிலுவைத் தொகையை மின் வாரிய அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக சரிபார்க்க வேண்டும் எனவும் இலவச தொலைபேசி எண் 1930- ஐ தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: மாறும் அரசியல் களம்…! நேரடியாக விமான நிலையம் சென்று அமித் ஷாவை வரவேற்ற அதிமுக தலைவர்கள்…!

maha

Next Post

ரூ.500 கோடியில் தமிழக அரசு போட்ட ஒப்பந்தம்.. 2 ஆண்டில் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு...!

Sun Jun 8 , 2025
தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே ஒசூரில் ரூ.500 கோடியில் ஜெர்மன் நிறுவனம் உற்பத்தி தொடங்கி 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசும், ஜெர்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனமும் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஒசூரில் ரூ.500 கோடியில் தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்து அதன் திறப்பு […]
Mk Stalin Tn Govt 2025

You May Like