வீட்டில் செல்வம் சேர வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது???. வீட்டில் செல்வம் சேர நாம் கடினமாக உழைக்க வேண்டும்.. உண்மை தான். அதே சமயம் நமக்கு அதிர்ஷ்டமும், கடவுளின் அருளும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி உங்கள் வீட்டிலும் செல்வம் சேர வேண்டுமா??? உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருந்தால் கட்டாயம் இதை செய்து பாருங்கள். நமது வீட்டில் செல்வம் சேர நமக்கு உதவுவது ஒரு இலை தான். வெறும் இலையா?? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம், இந்த இலை நமது வீட்டில் இருந்தால் அங்கு நல்ல தேவதைகளின் ஆதிக்கம் அதிகரித்து, அந்தச் செடியை சுற்றிலும் ஒரு விதமான ஈர்ப்பு இருக்கும். இதனால் அந்த இலை கெட்ட விஷயங்களை அகற்றிவிடும். அப்படி அது என்ன இலை தெரியுமா???
மருதாணி இலை, ஆம், மருதாணி இலைகளுக்கு நல்ல சக்திகளை வெளியிடும் ஆற்றல் அதிகம். இதனால் இந்த இலைகளை வைத்து தீபம் ஏற்றினால் வீட்டில் மகாலட்சுமி மற்றும் குபேர பகவானின் அருள் பெற்று சகல சௌபாக்கியங்களையும் அடைந்து விடலாம். இதற்கு நீங்கள், வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை லஷ்மி மற்றும் குபேரர் படத்தின் முன்பு ஒரு தாம்பூல தட்டை வைத்து (தாம்பூல தட்டு எவர்சில்வர், மற்றும் பிளாஸ்டிக்கில் இருக்க கூடாது). அந்த தட்டில், பிரெஷ் ஆக பறித்த மருதாணி இலைகளை பரப்பி விடவும். பின்னர் அதற்க்கு மேல், நாணயங்களை வைக்க வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் மற்றும் கிராம்பை தூவி கொள்ளலாம்.
அடுத்ததாக, மண் அகல் விளக்கு ஒன்றில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, பின்னர் அதனை மருதாணி இலைகளின் மீது வையுங்கள். பின்னர் விளக்கில் நெய் ஊற்றி, அதில் சுத்தமான பஞ்சனால் செய்யப்பட்ட திரியை போட்டு வடக்கு அல்லது கிழக்கு முகமாக தீபம் ஏற்ற வேண்டும். இதனால் நமக்கு செல்வமும் பணத்தையும் ஈர்த்து தரக்கூடிய அற்புதமான விஷயங்கள் நடக்கும்.