நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து வசூலில் டாப் 10 இடங்களை பிடித்த திரைப்படங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
2019ஆம் விஜய் – நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.295 கோடியை வசூலித்தது. 2017இல் விஜய், நித்யாமேனன், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ ரூ.260 கோடியை வசூலித்தது. 2018இல் வெளியான விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி விஜயகுமார் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ ரூ.250 கோடியை வசூலித்தது.
2022இம் ஆண்டு விஜய் – பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.236 கோடி ரூபாயை வசூலித்தது. 2021இல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வசூலை நெருங்கியது.
2016இல் ஆண்டு விஜய் – சமந்தா நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடியை வசூல் செய்தது. 2014இல் வெளியான விஜயின் ‘கத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.130 கோடியை வசூலித்தது. 2012ஆம் ஆண்டு விஜய் – காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.125 கோடியை வசூலித்தது. 2017இல் வெளியான ‘பைரவா’ திரைப்படம் ரூ.114 கோடியும், 2011இல் வெளியான ‘காவலன்’ ரூ.102 கோடியை வசூலித்தது.