பல மாதங்களாக ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளாவில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் ரேஷன் கார்டுகளை அரசு ஆய்வு செய்து வரும் நிலையில், லட்சக்கணக்கான கார்டுகளின் ரேஷன் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
கேரளாவில் 6 மாதங்களுக்கும் மேலாக ரேஷன் பொருட்கள் பெறப்படாமல் இருக்கும் 5,62,494 முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் தற்போது கண்காணிப்பில் உள்ளன. இதில் 4,40,811 வெள்ளை நிற அட்டைகளும், 1,21,683 நீல நிற அட்டைகளும் அடங்குகின்றன.
இந்த அட்டைகளுக்கான ரேஷன் விநியோகம் அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக முடக்கப்படலாம். நீண்ட காலமாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதே நேரத்தில், ரேஷன் கார்டு முடக்கப்பட்டால் அது நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது என்று அர்த்தமில்லை. மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்காக கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 3 மாதங்களுக்குள் e-KYC நடைமுறையை முடிக்க வேண்டும்.
மேலும், குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினரின் மொபைல் எண்ணும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து, தேவையிருந்தால் ரேஷன் கார்டு பதிவுகளில் அதை புதுப்பிக்க வேண்டும். நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பெறாமல் இருக்கும் குடும்பங்கள் இந்த நடைமுறைகளை சரியான காலக்கெடுவுக்குள் முடிப்பது முக்கியம்.
Also Read: KYC Update பெயரில் புதிய மோசடி.. இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீங்க!



