ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்..
ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்கள் திட்டவட்டமாக கூறி வருகிறார்.. எனினும் எந்த நிபந்தனையும் கட்சியில் இணைய தயார் என்று ஓபிஎஸ் தரப்பு கூறினார்.. அதையும் இபிஎஸ் பொருட்படுத்தவேவில்லை.. சசிகலாவும் ஒருங்கிணைந்த அதிமுக தான் வெற்றி பெற முடியும் என்று கூறி வருகிறார்..
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்துள்ளார்..
செங்கோட்டையனின் இந்த கருத்து குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி இதுகுறித்து பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் “ முதலில் எடப்பாடி பழனிசாமி தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. தமிழக மக்கள் எதிர்பார்ப்பது போல அதிமுக ஒன்றுபட வேண்டும்.. 10 நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க வேண்டும் என செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார்.. இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வராவிட்டால் அதிமுக தொண்டர்கள், மக்களும் எடப்பாடி பழனிசாமியை மன்னிக்க மாட்டார்கள்.. எனவே எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியை உடனடியாக அவர் தொடங்க வேண்டும்.. கட்சியை வலுப்படுத்த வேண்டும்..
நிச்சயமாக அதிமுக டிசம்பர் மாதத்திற்குள் ஒன்றுபட்டுவிடும்.. எடப்பாடி பழனிசாமி இதற்கு ஒப்புக்கொண்டால் அவர் தலைமை பதவியில் தொடரலாம்.. பாஜகவும் இதை தான் விரும்புகிறது.. நயினார் நாகேந்திரன் அதிமுக ஒருங்கிணைந்தால் அது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.. ஜனவரி 26-ல் ஒன்றுபட்ட அதிமுக உருவாகும். அதற்கு தடையாக இருப்பவர்கள் தகர்க்கப்படுவார்கள்.. இந்த இயக்கத்தில் இருந்து அப்புறப்படுவார்கள்.. அது எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி..
நான் போராடியது 8 ஆண்டுகள்.. நான் கூறிய கருத்துகள் தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்.. இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும்.. எடப்பாடி பழனிசாமியை காயப்படுத்துவது நோக்கம் இல்லை.. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி முன் வர வேண்டும்..
பொதுச்செயலாளரை தொண்டன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அதிமுகவின் விதி.. அதற்கு முதலில் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும்.. யாரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் அவர்களின் தலைமையின் கீழ் கட்சி இயங்கட்டும்.. இனிமேலும் கட்சி தோற்றாலும் பரவாயில்லை, தலைமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் எடப்பாடி பழனிசாமி பயணிக்கும் பாதை தவறு என்பதை செங்கோட்டையை சந்திப்பு உணர்த்தி உள்ளது..” என்று தெரிவித்தார்..
Read More : “செங்கோட்டையன் தான் உண்மையான அதிமுக தொண்டர்..” சசிகலா பரபரப்பு அறிக்கை.. அதிரும் அரசியல் களம்!



