fbpx

அசத்தல் அறிவிப்பு…! பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15- ம் தேதி கடைசி நாள்…! இந்த ஆவணங்கள் மட்டும் போதும்…!

சிறப்பு பருவ பயிர்களுக்கான திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலை பெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய்த்தாக்குதல் நிலச்சரிவு, இயற்கை சீற்றத்தினால் தீப்பிடித்தல் ஆகிய இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு பயிர் அறுவடை பரிசோதனையின் அடிப்படையில் பயிர்க் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும்.

ஆகஸ்ட் மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல் பயிருக்கு தற்பொழுது விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யலாம். நடப்பாண்டு யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெல் (சம்பா) பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.512 செலுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். வணிக வங்கிகள். பொது சேவை மையங்களை அணுகலாம். இத்திட்டத்தின் கீழ் சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 – ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேவையான ஆவணங்கள்

விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய அடங்கல், நில உரிமைப்பட்டா, ஆதார் அட்டை நகல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து, இடர்பாடு ஏற்படும் காலத்தில் பயிர்க் காப்பீட்டுத்தொகை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு உழவன் செயலி, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்

Vignesh

Next Post

நவராத்திரி 4 ம் நாள்!… மகாலட்சுமிக்கு விரதம் இருந்து வழிபடலாம்!… வாழ்க்கையில் மனநிம்மதி, மலர்ச்சி கிடைக்கும்!

Wed Oct 18 , 2023
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டு நாட்களாகும். துர்க்கை எப்படி துக்கங்களை போக்கி, தைரியத்தை தரக் கூடியவளோ, அதே போல் மகாலட்சுமி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நலன்களையும் அருளக் கூடியவள். மகாலட்சுமி என்றதும் செல்வத்தை தரும் தெய்வம் என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மகாலட்சுமி என்பவள் மனநிம்மதியையும், வாழ்க்கையிலும், தோற்றத்திலும் மலர்ச்சியை தரக் கூடியவள். நவராத்திரியின் 4, 5,6 […]

You May Like