LIC | நல்ல வருமானம் தரும் முதலீட்டுத் திட்டத்தைத் தேடினால், எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டம், வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் 100 வயது வரை ஆண்டுதோறும் நிலையான வருமானத்தை வழங்குகிறது. இந்த பாலிசியின் சிறப்பம்சம் என்னவென்றால், மாதத்திற்கு வெறும் ரூ.1,302 முதலீடு செய்வதன் மூலம், மிகப்பெரிய சேமிப்பையும் நிரந்தர வருமானத்தையும் பெற முடியும்.
எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசி, 100 ஆண்டுகளுக்குக் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய, 90 நாட்கள் குழந்தை முதல் 55 வயது வரை உள்ளவர்கள் தகுதியானவர்கள். இது குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது. பாலிசிதாரர் வாழும் வரை (அதிகபட்சம் 100 ஆண்டுகள் வரை), ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான தொகையை வருமானமாக பெறுவார்கள். இந்தத் திட்டத்தில் போனஸ் மற்றும் உத்தரவாதமான பலன்களும் கிடைக்கும்.
உதாரணமாக, ஒரு நபர் 30 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.1,302 செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதன் மூலம், அவர் வருடத்திற்கு ரூ.15,600 முதலீடு செய்கிறார். 30 ஆண்டுகளில், மொத்தமாக ரூ.4.68 லட்சம் முதலீடு செய்திருப்பார். பிரீமியம் செலுத்தும் காலம் முடிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ரூ.40,000 வரை நிலையான வருமானத்தைப் பெறத் தொடங்குவார்.
இந்த வருமானம் அவர் 100 வயதை அடையும் வரை தொடர்ந்து கிடைக்கும். இதன் மூலம், 30 வயதில் தொடங்கி 100 வயது வரை வாழும் ஒருவர், மொத்தமாக சுமார் ரூ.27.60 லட்சம் வரை வருமானம் பெறலாம். இந்த பாலிசியின் மூலம் வழக்கமான வருமானத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் அதாவது 100 ஆண்டுகள் வரை ஆயுள் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல, முதிர்வுத் தொகைக்கு பிரிவு 10(10D)-இன் கீழ் வரி விலக்கு கிடைக்கும். இந்தச் சலுகைகள் மற்றும் பலன்கள், இந்தத் திட்டத்தை ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக மாற்றுகின்றன.
Read More : இந்த விநாயகர் கோயிலுக்கு சென்று 16 படிகள் ஏறினாலே போதும்..!! உங்கள் வாழ்வில் அனைத்திலும் வெற்றி உறுதி..!!