பெரும் சோகம்.. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வீட்டில் மரணம்.. நாளை இறுதி சடங்கு..!

vijayaganth

மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் சகோதரி, மருத்துவர் விஜயலட்சுமி (78) சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். 


தமிழ் சினிமாவில் 40ஆண்டுகள் கோலோச்சி இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரின் மறைவு அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதுரையை பூர்விகமாக கொண்ட விஜயகாந்த் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 11 பேர். 6 ஆண்பிள்ளைகள் 5 பெண்பிள்ளைகள். மூத்தவர் நாகராஜ், அதற்கடுத்தபடியாக விஜயகாந்த், அதன்பின்னர் செல்வராஜ், பால்ராஜ், ராமராஜ், பிரித்திவிராஜ். இதுபோல் விஜயலட்சுமி, திருமளாதேவி, சித்ரா, மீனாகுமாரி, சாந்தி என 5 சகோதரிகளுடன் பிறந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே தன் குடும்பத்தின் மீதும் உடன் பிறப்புகள் மீதும் அலாதி அன்பும் அக்கறையும் கொண்டவர். இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த சகோதரி டாக்டர் விஜயலட்சுமி (78) இன்று காலமானார். விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று நிலைமை மோசமடைந்து உயிரிழந்தார்.

அவரது இறுதி சடங்குகள் நாளை மதுரையில் உள்ள சொந்த ஊரில் நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கண்ணீருடன் தெரிவித்தார். விஜயலட்சுமியின் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Read more: கிரகங்களின் மகா யோகம்! சூரியன், சுக்கிரனின் அருளால் பணத்தை அள்ளப் போகும் 3 ராசிகள்

English Summary

Great tragedy.. DMDK founder Vijayakanth passes away at home.. Funeral tomorrow..!

Next Post

உங்கள் மொபைலில் இந்த 5 Settings-ஐ மாற்றவும்.. பேட்டரி ஆயுள் அதிகரிக்கும்.!

Tue Sep 9 , 2025
நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்கள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. நம் கையில் போன் இல்லாமல் நாள் முழுவதும் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. சிறிய வேலைகளுக்குக் கூட போன் தேவை. தூங்கும் போது தவிர எல்லா நேரங்களிலும் நம் கையில் போன் இருக்கிறது.. மொபைல் போன்கள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும். அது நாம் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. மொபைல் போன்களைப் பயன்படுத்தும் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனை […]
mobile phones e1761024674749

You May Like