குடை முக்கியம்.. நாளை 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை..!! வெதர் அப்டேட்..

rain

தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.11) ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 13 முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 13-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Read more: செப். 13. அன்று திருச்சியில் ஆட்டத்தை தொடங்கும் விஜய்..! 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..

English Summary

The Meteorological Department has warned of the possibility of heavy rain in 4 districts of Tamil Nadu.

Next Post

அதிமுக இணைந்தால் இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? ஓபிஎஸ் சொன்ன தடாலடி பதில்!

Wed Sep 10 , 2025
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய நிலையில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் இதனை வரவேற்றுள்ளனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன் என்பதில் உறுதியாக கூறி வருகிறார்.. அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற எதிர்பாப்பு நிலவி வருகிறது.. மேலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் இணைந்தால் இபிஎஸ் நெருக்கடியாக மாறும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் […]
eps and ops

You May Like