தளபதி விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய நாளிலிருந்து அவர் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கான விடை இன்று கிடைத்திருக்கிறது. தளபதி விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான பெயரையும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜயின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டிருக்கிறது. ஜாதி மத பேதங்கள் இல்லாத லஞ்ச ஊழலற்ற ஆட்சியை பொதுமக்களுக்கு […]

தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசின் சிபிஎஸ்இ ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழகப் பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பாடத்திட்டத்தைச் அறிமுகப்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு பாஜக சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடத் […]

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், சென்னையில் வரும் ஜன. 8, 9-ம்தேதிகளில், தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக அவ்வப்போது மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் காணொலி வாயிலாகவும், […]

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ‘ஜே என் 1’ வகை கொரோனா தொற்று 2 வாரத்திற்கு முன் கண்டறியப்பட்டது. தற்போது வரை கேரளாவில் 1324 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் 79 வயது மூதாட்டியை […]

“கேரளாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஒன்று சிங்கப்பூர் மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பரவி வருகிறது. அந்த […]

தமிழகத்தை தாக்கிய புயல் மற்றும் வெள்ளம் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது கடும் புயல் மழையால் சென்னை தத்தளித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசின் நிர்வாக வின்மையை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் திமுக அரசை விமர்சித்திருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி […]

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை நாள் மக்களின் இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திமுக அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது எனவும் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை திமுக அரசு […]

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நாள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தின் அருகே உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் புயல் சென்னை அருகே கரையை கடக்க இருப்பதால் […]

கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் படி குற்றமாகும். தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் சில்லறை மற்றும் மொத்த மருந்து […]

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கிலோமீட்டர் இருசக்கர வாகன பேரணி இன்று கன்னியாகுமரியில் இருந்து துவங்கியது. இந்தப் பேரணி தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகள் 54 பிரச்சாரம் மையங்களுக்கு செல்ல இருக்கிறது. இந்தப் பேரணையின் போது பல லட்சக்கணக்கான இளைஞர்களையும் இவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இன்று தொடங்கி இருக்கும் இந்த பயணம் வருகின்ற 27ஆம் தேதி முடிவடையும் என […]