தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் சம்மந்தி வேதமூர்த்தி (81), உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். செந்தாமரை – சபரீசன் தம்பதியினர் தற்போது சென்னை நீலாங்கரையில் வசித்து வருகின்றனர். இவரது தந்தை வேதமூர்த்தி, நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்.
வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். அவரது உடல், அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏ.ஜி.எஸ் காலனியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதி சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. வேதமூர்த்தியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் காலமான நிலையில், குறுகிய கால இடைவெளியில் மீண்டும் அவரது குடும்பத்தில் சோகம் நிகழ்ந்துள்ளது. இதனால் திமுக வட்டாரத்திலும், குடும்பத்தினரிடையிலும் துயரம் நிலவுகிறது.
Read more: உஷார்.. இந்த உணவுகள் நீரிழிவு மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும்..!! – மருத்துவர்கள் வார்னிங்..



