ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு இன்று குறைதீர்ப்பு முகாம்…!

pension 2025

தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு வட்டம் சார்பில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு முகாம் 2025 செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முறையான அறிவிக்கை, அதிகாரப்பூர்வ இணையதளமான www.cgca.gov.in/ccatn என்ற தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த குறைதீர்ப்பு இன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை காணொலிக்காட்சி முறையில் நடைபெறவுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளை சமர்ப்பித்து, இதுவரை தீர்வு காணப்படாமல் நீண்டகாலமாக தொடரும் குறைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இந்தக் குறைதீர்ப்பு முகாமில் பரிசீலிக்கப்படும். காணொளி வாயிலான இந்த குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான இணைப்பு, முகாம் நடைபெறும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக உங்களுக்கு பகிரப்பட்டு இருக்கும். அதை வைத்து குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நடைப்பயிற்சியின்போது இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்!. உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது!

Fri Sep 12 , 2025
நடப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் தவறான வழியில் நடப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நடக்கும்போது ஏற்படும் தீமைகள் மற்றும் சரியான வழி எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நடைபயிற்சி என்பது ஒரு எளிதான மற்றும் இயற்கையான பயிற்சியாகும் , இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் , பல கடுமையான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது . ஆனால் பெரும்பாலும் மக்கள் நடக்கும்போது சில தவறுகளைச் செய்கிறார்கள் , இதன் […]
Walking Routine

You May Like