ரூ.20 லட்சம் கோடி செல்வம் இருந்தும் ஒரே தொப்பி.. பழைய உடைகளை அணிந்த எளிய மன்னன்..!! யார் தெரியுமா..?

NIZAM

இந்தியாவின் ஹைதராபாதில் வாழ்ந்த ஏழாவது நிஜாம் மிர் உஸ்மான் அலி கான், உலகின் மிகப் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய செல்வத்தின் அளவு, வைரம், தங்கம், பரந்த நிலங்கள், அரண்மனைகள், வாகனங்கள் போன்றவை யாரையும் ஆச்சர்யமூட்டும். ஆனால் அதனை அனுபவிக்கும் விதம் அவருக்கே தனித்துவமானது.


மிர் உஸ்மான் அலி கான் உலகின் பணக்காரர் ஆனாலும், அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் எளிமையானது. அவர் வைத்திருக்கும் வைரங்களை வெறும் காகித எடையாக வைத்திருந்தார். தங்க பாத்திரங்கள் இருந்தாலும், உணவை எப்போதும் தகரத் தட்டில் சாப்பிட்டார். 50க்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தும், பெரும்பாலான கார்களை பழையவையாகவும், உடைந்தவையாகவும் பயன்படுத்தினார்.

அரண்மனைகள், நகைகள், வைரம், தங்கம் ஆகியவற்றின் கணக்கில் மொத்த நிகர மதிப்பு ரூ. 20,35,00,00,00,000 (236 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). இதுவும் அவரை உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக மாற்றியது. 1893-ல் கட்டப்பட்ட 32 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த அரண்மனை, 220 அறைகள், 80 அடி நீள டைனிங் டேபிள் மற்றும் 101 பேருக்கான அமர்வு வசதியுடன் அமைந்தது. இது ஒரு காலத்தில் டைம் பத்திரிகையின் அட்டைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது.

அவருடைய உடை அணிவும், வாழ்க்கை முறையும் எளிமையாக இருந்தது. 35 ஆண்டுகளாக அணிந்திருந்த ஒரே தொப்பி, பழைய உடைகள், விருந்தினர்கள் விட்டுச் சென்ற புகை பிடிப்பான சிகரெட்டுகளை கூட புகைத்தல், தங்க பாத்திரங்கள் இருந்தும் உணவை தகரத் தட்டில் சாப்பிடுதல். இவை அனைத்தும் அவரின் எளிமை வாழ்க்கையின் சாட்சி.

அதிக செல்வம் இருந்தாலும், மிர் உஸ்மான் அலி கான் தேசப் பற்றையும் மறக்கவில்லை. 1965 ஆம் ஆண்டு, இந்தியா-சீனா போரின் போது அவர் 5 டன் தங்கத்தை இந்திய அரசுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். இதன் மூலம் அவரது தேசப்பற்று உணர்வு மற்றும் பொறுப்புணர்வு வெளிப்பட்டுள்ளது.

மிர் உஸ்மான் அலி கான் வாழ்க்கை எளிமை, மரியாதை மற்றும் செல்வத்தின் ஒற்றுமை என்று உணர்த்துகிறது. செல்வம் என்பது மனிதனை உயர்த்தும் கருவி மட்டுமே; மரியாதை மற்றும் உண்மையான உயர்வு மனதில் உருவாக வேண்டும் என்பதற்கான சிறந்த பாடம் அவர் நமக்கு கொடுத்தார்.

Read more: மனைவியின் செல்போனில் கொட்டிக் கிடந்த ஆபாச வீடியோக்கள்..!! பல ஆண்களுடன் உடலுறவு..!! பூசாரி செய்த பயங்கர சம்பவம்..!!

English Summary

A simple king who had a wealth of Rs. 20 lakh crores.. and ate from a tin plate after giving away gold and diamonds..!

Next Post

முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து சேதமாகிவிட்டதா..? இனி இந்த டிரிக்ஸை யூஸ் பண்ணுங்க..!!

Fri Sep 12 , 2025
திடீர் மழை, வெள்ளம் அல்லது வேறு காரணங்களால் நமது பள்ளிச் சான்றிதழ்கள், சொத்துப் பத்திரங்கள், பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற முக்கியமான ஆவணங்கள் தண்ணீரில் நனைந்துவிட்டால், பதற்றமடைந்து விடுவோம். காகிதங்கள் ஒட்டிக்கொள்ளுமோ, எழுத்துக்கள் அழிந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால், பதற்றப்படாமல் சரியான வழிமுறைகளை பின்பற்றினால், நனைந்த ஆவணங்களை கூட எளிதாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். தண்ணீரில் நனைந்த ஆவணங்களை சரிசெய்ய, முதலில் செய்ய வேண்டியது அதில் உள்ள […]
Documents 2025

You May Like