இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025-இல், போலந்தின் ஜூலியா ஸெரெமேட்டாவை தோற்கடித்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா, தங்கப் பதக்கம் வென்று வரலாற்றை படைத்துள்ளார்.
இங்கிலாந்து லிவர்பூலில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 நடைபெற்று வருகிறது. பெண்கள் 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஜாஸ்மின் லாம்போரியா, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற போலந்தின் ஜூலியா ஸெரெமேட்டாவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட ஜாஸ்மின் 4-1 என்ற கணக்கில் ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
பெரும்பாலான நேரத்தில் பின்தங்கியிருந்த போதிலும், இறுதியில் ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் போட்டியை முழுமையாகக் கட்டுப்படுத்தி வெற்றியை உறுதிப்படுத்தினார்.
“இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உலக சாம்பியனாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2024 பாரிஸில் நான் ஆரம்பத்தில் வெளியேறிய பிறகு, நான் சென்று எனது நுட்பத்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்திக் கொண்டேன். இது ஒரு வருட தொடர்ச்சியான உழைப்பின் விளைவாகும்” என்று லம்போரியா ஒலிம்பிக்ஸ்.காமிடம் கூறினார்.
இதில் மற்ற இந்திய வீராங்கனைகளான நுபுர் ஷியோரன் (+81 கிலோ) வெள்ளிப் பதக்கமும், பூஜா ராணி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். 48 கிலோ பிரிவில், இந்தியாவின் மினாக்ஷி கசகஸ்தானின் நாசிம் கைசைபாயை எதிர்கொள்ளத் தயாராக உள்ளார். இன்று (செப்டம்பர் 14ஆம் தேதி) நடைபெறும் தங்கப் பதக்கப் போட்டியில் இருவரும் மோதவிருக்கின்றனர். இப்போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கத்தை எதிர்நோக்கி உள்ளது.
Readmore: அலுவலகத்தில் இந்த 4 நாற்காலி யோகா செய்யுங்கள்!. கழுத்து மற்றும் முதுகு வலியிலிருந்து விடுபடுங்கள்!.



