மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் அறிவிக்கபட்ட நிலையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்: SMED, சுற்றுச்சூழல், பிராசஸ், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், பைபிங், SMMS, ஜென் சிவில் ஆகிய பிரிவில் நிரப்பப்படுகிறார்கள்.
ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு-2 – 20
ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு-3 – 28
வயது வரம்பு:
* ஆசோசியேட் இன்ஜினியர் (Grade-2): அதிகபட்சம் 37 வயது (31.08.2025 தேதியின்படி)
* Grade-3: அதிகபட்சம் 41 வயது
தளர்வுகள்:
- SC/ST பிரிவு: 5 ஆண்டுகள் தளர்வு
- OBC பிரிவு: 3 ஆண்டுகள் தளர்வு
- மாற்றுத்திறனாளிகள்: வகுப்பிற்கு ஏற்ப 10–15 ஆண்டுகள் தளர்வு
கல்வித்தகுதி: இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் நிரப்பவிருக்கும் ஆசோசியேட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு பின்வரும் துறைகளில் பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:
- கெமிக்கல் (Chemical)
- மெக்கானிக்கல் (Mechanical)
- சிவீல் (Civil)
- சுற்றுச்சூழல் (Environment)
- தொழில்துறை மாசுபாடு குறைப்பு (Industrial Pollution Control)
- எலெக்ட்ரிக்கல் (Electrical)
- இன்ஸ்ரூமெண்டேசன் (Instrumentation)
- உலோகவியல் (Metallurgy)
படிப்புகள்:
- B.E / B.Tech / B.Sc (Engineering)
அனுபவம்:
- Grade-2 பணியிடங்கள்: குறைந்தது 5 வருட அனுபவம்.
- Grade-3 பணியிடங்கள்: படிப்பை முடித்த பிறகு 9 வருட அனுபவம்.
சம்பளம்:
* ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு-2 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.80,000 சம்பளமாக வழங்கப்படும்.
* பெருநகரம் இல்லாத நகர்புறங்களில் பணி நியமனம் பெறும் நபர்களுக்கு ரூ.76,000 மற்றும் ரூ.72,000 வழங்கப்படும்.
* ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு-3 பதவிக்கு ரூ.90,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
* கர்புரங்களில் பணி வாய்ப்பை பெறுபவர்களுக்கு ரூ.91,200 மற்றும் ரூ.86,400 வழங்கப்படும்.
* இவையில்லாமல் ரூ.2 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு, போக்குவரத்து செலவு ஆகியவையும் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
* விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிகள் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே தெரிவு செய்யப்படுவர்.
* தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
* நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி நியமனம்: தேர்வு செய்யப்பட்டவர்கள் முதல் கட்டமாக 2 ஆண்டுகள் பணி நியமனம் அடைவேனர். பணி நியமனத்திற்கு பிறகு, மருத்துவ ரீதியாக தகுதி பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://recruitment.eil.co.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. வரும் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 24 செப்டம்பர் 2025
Read more: நாடு முழுவதும் HDFC வங்கி சேவை முடக்கம்.. பணம் அனுப்ப முடியாமல் பயனர்கள் அவதி..!! என்ன காரணம்..?